சுகாதார பராமரிப்பு 28 மார்ச் 2020

2019 நூதனமான கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸைப் பற்றி நான் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது என்னென்ன?

இந்த பாடத்திட்டத்தில்  இந்த வைரஸைப் பற்றியும் அந்த நோய்க்கு விஞ்ஞானிகள் வைத்த பெயரான COVID19 ஐப்  பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளவிருக்கிறீர்கள். அது என்ன? எங்கிருந்து வந்தது? இதை அறிந்து கொள்வதால் உங்களுக்கு என்ன பயன்?
இவற்றைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்…

41 அட்டைகள்

பரபரப்பு மிகுந்த நகரத்தில் வசிக்கும் சுசீலாவிடமிருந்து கற்றுக்கொள்வோம். இந்த  நூதனமான கொரோனா வைரஸை‌ எண்ணி  அவள் மிகவும் பதட்டமாக இருக்கிறாள்.‌ அவள் எதை எதிர்நோக்கி இருக்க வேண்டும்? என்பதையும் அவளுடைய குடும்பம் நோய்வாய்ப்பட அல்லது இறக்கும் வாய்ப்புகள் உள்ளனவா? அவள் ஆச்சரியப்படுகிறாள்.

கொரோனா வைரஸ் என்பது மக்களிடையே பரவக்கூடிய ஒருவகையான நோய்த்தொற்று ஆகும். காய்ச்சல் போலவே, துப்புதல் மற்றும் இருமலில் இருந்து வைரஸ் துகள்களைச்  சுமந்து வரும் துளிகளால் இந்த வைரஸ் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சுசீலாவிற்கு இந்த வைரஸ் தொற்று வருவதற்கான ஆபத்து குறைவு. ஏனெனில் அவரது நகரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் எதுவும் இல்லை. ‌மேலும் அவள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யவில்லை.

அவளது கணவரான பிரகாஷிற்கு , கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு சற்று அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவர் அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணிக்கிறார். மேலும்  செவிலியராகவும் வேலை செய்கிறார். காய்ச்சல் மற்றும் இருமல் இருந்த ஒரு நோயாளிக்கு நேற்று அவர் சிகிச்சை அளித்துள்ளார்.

பிரகாஷின் மருத்துவமனை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் இருமலுடன் வரும்போது, ​​அவர்கள் அணிய முகமூடி வழங்குகிறது. மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் விதமாக அவர்கள் தனிக் காத்திருப்புப் பகுதியில் அமர வைக்கப்படுன்றனர்.

பிரகாஷ் கிளினிக்கிலிருந்து வீடு திரும்பும்போது, அவர் தனது காலணிகளையும் வெளிப்புற ஆடைகளையும் கேரேஜில் அகற்றிவிட்டு, பின்னர் குளிக்க செல்கிறார். வீட்டிற்குள் வரும் வைரஸ் துகள்களைக் கட்டுப்படுத்த அவர் இதைச் செய்கிறார்.

சுசீலாவின் மகள் சுபாவிற்கு இந்தத் தொற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து சற்று அதிகமாக உள்ளது. ஏனெனில் கொரோனா வைரஸின் தாக்கம்  கண்டறியப்பட்ட ஒரு நகரத்தில் வசிக்கும் தன் தோழியியை அவள் சந்தித்தாள்.  அவளுடைய தோழிக்கு தற்போது உடல்நிலை சரியில்லை.

சுசீலாவின் நகரத்தில் COVID19 உறுதிப்படுத்தப்பட்டவர்கள் என்று தற்சமயம் எவரும் இல்லை எனினும், மக்கள் அதிகம் பயணிக்கும் இந்நகரில் அது எளிதில் பரவக்கூடும். எனவே ஒவ்வொரு குடும்பமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகிறது. இதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.

தங்கள் கைகளையும் வீட்டினையும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சுசீலாவும் பிரகாஷும் கிளீனர்கள் மற்றும் சோப்புகளை வாங்குகிறார்கள். சுசீலாவின் வயதான தாய்க்கு அவர்கள் மருந்துகளை  நீண்ட நாட்களுக்கு வாங்கி வைக்கிறார்கள். இதனால் அவர் வீட்டில் பாதுகாப்பாக இருக்க முடியும்.

சுசீலா தனது குடும்பத்தின் அன்றாட நடைமுறைகளில் ஏற்படப்போகும் மாற்றங்களுக்கு ஏற்றபடி அவள் வீட்டிலிருந்து வேலை செய்வது பற்றி தனது முதலாளியுடன் ஆலோசனை செய்கிறாள்.  அவள் குழந்தைகளின் பள்ளிகள் மூடப்படும் பட்சத்தில் அதற்கான திட்டங்களையும் வகுக்கிறாள்.

பிரகாஷ் தனது குழந்தைகளுக்கு கைகளைச் சரியாக கழுவுவது எப்படி என்பதைச் செய்து காட்டுகிறார். கழிவறைகளைப் பயன்படுத்தியதும், பொதுஇடங்கள் வழியாகச் சென்ற பின்பும், மூக்குச்சளியினை வெளி உமிழ்ந்த பின்பும், சாப்பிடுவதற்கு முன்பும், முகத்தைத் தொடுவதற்கு முன்பும் கைகளை‌ நன்கு கழுவ அறிவுறுத்துகிறார்.

சோப்பு மற்றும் தண்ணீர் அருகில் இல்லையெனில், குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் உள்ள கை சுத்திகரிப்பானைப் (sanitizer) பயன்படுத்தவும். பாக்டீரியா எதிர்ப்பு கைச் சுத்திகரிப்பானோ,அதிக அளவு ஆல்கஹால் இல்லாதவையோ பயனளிக்காது.

நினைவூட்டல்
  • உங்களுக்கு நூதனமான கொரோனா வைரஸ்‌ பெறுவதற்கான  ஆபத்தானது, அவ்வைரஸ் உள்ள ஒருவருடன் நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
  • இந்த வைரஸ், நோயினை ஏற்படுத்திய பகுதிகளிலிருந்து விலகி இருப்பதன் மூலம் உங்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்ளலாம்.
  • உங்கள் கைகளை அடிக்கடி கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
  • உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

2019 டிசம்பரில் சீனாவின் வுஹானில் பலர் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டபோது, இது​​ “நூதனமான கொரோனா வைரஸ்” என்பதை  மருத்துவர்கள் கண்டறிந்தனர். இது நூதனமானது.  ஏனெனில் விஞ்ஞானிகள் இதற்கு முன்பு இதை கண்டறிந்ததில்லை.

புதிய வைரஸ்கள் எல்லாக் காலங்களிலும் காணப்படுகின்றன. வைரஸ் என்பது ஒரு வகை நுண்ணிய ஒட்டுண்ணி. அது உயிர்வாழ உயிரினங்கள் தேவை. வைரஸ்கள் உயிரினங்களின் உயிரணுக்களுக்குள் பல்கிப் பெருகுகின்றன.

கொரோனா வைரஸின் செல்கள் தங்களைச் சுற்றிப் புரதக் “கிரீடங்கள்” கொண்டவை.  கொரோனா வைரஸ்களில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை வெளவால்கள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்களில் காணப்படுகின்றன.

விலங்குகளும் மனிதர்களும் தங்களது நெறிமுறைகளை மீறும் பட்சத்தில், விலங்கின் வைரஸ் சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும். மேலும் மனிதன் அந்த வைரஸை மற்றொரு மனிதனுக்கு பரப்ப முடியும். COVID19 இந்த வகையில் தான் தோன்றியது.

பல்வேறு வகையான காய்ச்சல் இருப்பதைப் போலவே, பல்வேறு வகையான கொரோனா வைரஸ் உள்ளன. சிலது லேசான நோயை ஏற்படுத்துகின்றன, மற்றவை SARS கொரோனா வைரஸைப் போல மிகவும் கடுமையானதாக இருக்கும்.

2019ல் தோன்றிய இந்த நூதனமான கொரோனா வைரஸ் SARS கொரோனா வைரஸுடன் ஓரளவு ஒத்திருக்கிறது, எனவே விஞ்ஞானிகள் இதற்கு SARS கொரோனா வைரஸ் 2 அல்லது சுருக்கமாக “SARS-CoV-2” என்று பெயரிட்டுள்ளனர்.

மறுபரிசீலனை
  • நூதனமான கொரோனா வைரஸ் ஒரு வைரஸ். அவை தன்னைத்தானே பெருக்கிக்கொள்வதற்கு உயிரினங்கள் தேவை.
  • இது SARS கொரோனா வைரஸ் போன்ற பிற கொரோனா வைரஸ்களுடன் தொடர்புடையது, ஆனால் இது பொதுவாக SARS ஐ விட குறைவான  வீரியம் கொண்ட நோயை ஏற்படுத்துகிறது எனினும் இது மிக எளிதாக பரவுகிறது.
  • இது ஒரு விலங்கிலிருந்து ஒரு மனிதனுக்கு முதலில் சென்றிருக்கலாம்.

சுசீலா இப்போது தனது நகர மக்களுக்கு இந்த கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதான செய்திகளைக் கேட்கிறாள். சுகாதார வல்லுநர்கள் “சமூக பரவலை”ப் பற்றி பேசுகிறார்கள்.

சமூக பரவல் என்பது ஒரு பகுதியில் குறைந்தது ஒரு சிலராவது இந்த வைரஸால் நோய்வாய்ப்பட்டுள்ளதைக் குறிக்கும்.  ஆனால் சிலருக்கு அவர்கள் எப்படி நோய்வாய்ப்பட்டார்கள் என்றே தெரியாது. இதிலிருந்து இந்த  வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு பரவக்கூடியது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதியில் கொரோனா வைரஸின் சமூகப்பரவல் ஏற்பட்டால், பொது இடங்களுக்கும் கூட்டங்களுக்கும் செல்வதைக்  குறைத்துக் கொள்ளவும். கைகுலுக்குவதைத் தவிர்க்கவும். நோய்வாய்ப்பட்ட ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதையும் தவிர்க்கவும். இதுவே “சமூக விலகல்.”

முகமூடிகளால் என்ன செய்ய இயலும்? சில சிறப்பு வகையான முகமூடிகளைச் சரியாக அணிந்துகொள்வதால் உங்கள் சமூகத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைப் பாதுகாக்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் இருமல் மற்றும் தும்மல்களிலிருந்து அவர்களை அவை பாதுகாக்கும்.

ஆனால் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உங்களுக்கு முகமூடி தேவையில்லை. அவை வைரஸ் துகள்கள் உள்ளே வருவதைத் தடுக்காது. நீங்கள் முகமூடி அணிய நேர்ந்தால், அதைப் போடுவதற்கு முன்பும் அல்லது சரிசெய்யும் முன்பும் கைகளைக் கழுவுங்கள்.

இதயம், நுரையீரல் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று மிகவும் ஆபத்தை விளைவிக்கும். இத்தகைய உடல்நிலைகளைக் கொண்டவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், வீட்டாரிடமும், நோயுற்றவர்களிடமிருந்து விலகி இருக்க முயற்சிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கையோடு இருப்பினும், நீங்கள் நோய்வாய்ப்பட்டால் என்ன செய்வது? உங்களுக்கு  நீண்டகால நோய் எதுவும் இல்லையெனில் குறைந்தபட்ச பாதிப்புகள் மட்டுமே ஏற்படும்.
இவற்றைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்…

சுசீலாவின் மகள் சுபாவிற்கு உடல்நிலை சரியில்லை. சற்று அதிக உடல் வெப்பநிலையையும் கொண்டிருக்கிறாள். காய்ச்சல், இருமல், உடல் வலி, மூச்சுத் திணறல், சில சமயங்களில் தலைவலி, தொண்டை புண் அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகளாகும்.

சுபா சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்கிறாள். அவள் வகுப்புகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்கிறாள். இச்செயல் அவளுக்கு வைரஸ் இருப்பின் அது மற்றவர்களுக்குப் பரவாமல் பாதுகாக்கிறது. அவளுடைய பாட்டி சொல்வது போல் ​​அவள் தன் அறையிலேயே தங்குகிறாள்.

சுபா அதிக இருமலை எதிர்கொள்ளும் போது, ​​அவள் ஒரு திசு காகிதத்தைப் பயன்படுத்துகிறாள் அல்லது  கைகளுக்குள் பொத்தி  செய்கிறாள். ஆகையால் தான் நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் முகமூடி அணிய வேண்டும்.

சுபாவின் இருமல் மற்றும் காய்ச்சல் கொரோனா வைரஸின் அறிகுறிகளை ஒத்திருக்கின்றன. சுசீலா அவர்களின் குடும்ப மருத்துவரை அழைக்கிறார்.

சுபாவின் அறிகுறிகள் கடுமையாக இல்லாததால், மருத்துவர் அவளை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறார். அவள் இருமல் மருந்து எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கிறார். சரியாகப் பயன்படுத்தப்படும் கையுறைகள் மற்றும்  முகமூடிகள் சுசீலாவை நோய் தாக்காமல் பாதுகாக்கும்.

கடுமையான அறிகுறிகள் - சுவாசிப்பதில் சிரமம், கூர்மையான மார்பு வலி, நடுக்கம் மற்றும் வியர்வை போன்றவை நிமோனியா தொற்றாகக் கூட இருக்கலாம். அந்த அறிகுறிகளைக் கொண்ட ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவை அழைக்க வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் வீட்டை நன்கு சுத்தம் செய்கிறார்கள். காய்ச்சல் வைரஸைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோகக் கிளீனர்களும் இதேபோல் கொரோனா வைரஸுக்கு எதிராகச் செயல்படும்.

யாரோ ஒருவர் தனது சகோதரியை “தனிமைப்படுத்தலுக்காக” அழைத்துச் செல்லப் போகிறார் என்று சுசீலாவின் மகன் பயப்படுகிறான். ஆனால், உடல்நிலை சரியில்லாத போதும் 2 வாரங்கள் வீட்டிலேயே இருந்ததனால், சுபா ஏற்கனவே மற்றவர்களைப் பாதுகாத்து வருகிறாள்.

அவரது சகோதரி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், சுசீலா தனது மகனை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்கிறாள்.  அவளால் மற்ற குடும்பங்கள் நோய்வாய்ப்படுவதை விரும்பவில்லை.

நீங்கள் கொரோனாவால் நோய்வாய்ப்பட்டால், உடனே நீங்கள் இறக்க நேரிடும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. வயதானவர்களை விட குழந்தைகள் குறைந்த அளவே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோயால் ஆபத்து சற்று அதிகமுள்ளது.

உங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால், வீட்டிலேயே இருங்கள். மற்றவர்களிடமிருந்து விலகி இருங்கள். முகமூடி அணியுங்கள். உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல், குளிர் வியர்வை, குத்தும் மார்பு வலி அல்லது தீவிர தூக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனே அவசர சிகிச்சை உதவியினை நாடுங்கள்.

சில வாரங்கள் கழித்து, சுசிலா அரசாங்க அதிகாரிகளிடமிருந்து "அத்தியாவசிய" வேலைகளைச் செய்யாவிட்டால், அல்லது அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய தேவைகள் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கேட்கிறாள்.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிரகாஷ்  வேலைக்குச் செல்கிறார், ஆனால் குடும்பத்தின் மற்றவர்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். மளிகை விநியோக சேவையில் சுசிலா சரிபார்க்கிறாள் . அவர்களின் குழந்தைகள் தங்கள் நண்பர்கள் மற்றும் பாட்டியுடன் பேச வீடியோ அரட்டையைப் பயன்படுத்துகிறார்கள். பிரகாஷ் பொறுத்த வரை நோயாளிகள் தனக்கு தெரியாமல் தங்கள் நண்பர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்று அவரின் கருத்து.

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் இல்லை. விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் இதற்கு பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகலாம்.

சுருக்கம்

உங்களைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதுதான் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான முதல் படி. 

நல்ல சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலமும், நோய்வாய்ப்பட்டிருக்கும் போது மற்றவர்களிடமிருந்து உங்களைத் தூர விலகி இருப்பதன் மூலம் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கலாம்.

அசம்பாவிதங்கள் ஏற்படும் போது, ​​உங்கள் உள்ளூர் சுகாதாரத் துறையின் செய்திகளை அவ்வப்போது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னூட்டம்

இந்த பாடத்திட்டத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

தாரா சி. ஸ்மித், பிஎச்.டி.

டாக்டர் ஸ்மித் கென்ட் மாநிலத்தில் தொற்றுநோயியல் பேராசிரியராக உள்ளார். அவரது ஆராய்ச்சி விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மாற்றப்படும் ஜெனோடிக் நோய்த்தொற்றுகளில் கவனம் செலுத்துகிறது.

இயன் மேக்கே, பிஎச்.டி.

டாக்டர் மேக்கே பொது சுகாதார வைராலஜி வேலை. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வைரஸ்களை அவர் கண்டறிந்து வகைப்படுத்துகிறார்.

வாஷிங்டனின் சியாட்டிலில் ஹாரிசன் கலோடிமோஸ், எம்.டி.

டாக்டர் கலோடிமோஸ் முதன்மை பராமரிப்பில் ஈடுபடும் ஒரு குடும்ப மருத்துவர்.


மொழி
பகிர்
ஆதாரங்கள்
மேலும் அறிக
கலை மற்றும் கதைசொல்லல் மூலம் கற்றல் அறிவியலையும் ஆரோக்கியத்தையும் வேடிக்கையாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான ஒரு பணியில் லைஃபாலஜி உள்ளது.

லைஃபாலஜி என்பது விஞ்ஞானத்தையும் கலையையும் இணைக்கும் ஒரு தளமாகும், இது எவரும் ரசிக்கக்கூடிய விளக்கப்பட மினி-படிப்புகளில்! விஞ்ஞானம் மற்றும் சுகாதார தகவல்தொடர்புகளை புதுமைப்படுத்த வல்லுநர்கள், படைப்பாளிகள் மற்றும் வாசகர்களை ஒன்றிணைக்கும் ஒரு சமூக இடமும் எங்களிடம் உள்ளது.

மேலும் அறிய Lifeology.io ஐப் பார்வையிடவும்.